இந்தியா

தெலங்கானாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் ராஜிநாமா!

தெலங்கானாவில் பாஜக தலைவர் ரபோலு ஆனந்த் பாஸ்கர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

DIN

தெலங்கானாவில் பாஜக தலைவர் ரபோலு ஆனந்த் பாஸ்கர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், 

கட்சியில் இருந்து விலகும்போது, நான் குற்றம் சாட்டுவது கண்ணியமானதாக இருக்காது. ஆனால், உங்கள் அனைவரையும் நேர்மையாக  சுய பரிசோதனை செய்ய தாழ்மையுடன் அழைக்கிறேன். 

கடந்த 4 ஆண்களாகப் பாடுபடுவதைத் தவிர வேறெதுவும் இல்லை. நான் அவமானப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டேன் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பாஸ்கர் காங்கிரஸில் இருந்தபோது 2012 முதல் 2018 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 

மேலும், சமீபத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர் ராவை, அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனில் சந்தித்து ஆளும் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் காங்கிரஸில் இருந்து விலகி 2019ல் பாஜகவில் இணைந்தார். 

முன்னதாக, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் சுவாமி கௌட் மற்றும் ஸ்ரவன் தசோஜு ஆகிய இரு தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து ஆனந்த் பாஸ்கர் தற்போது ராஜிநாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

சாதகமான பலன் இன்று யாருக்கு? தினப்பலன்கள்!

டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT