இந்தியா

குளிர்காலம் தொடங்கியதால் கேதார்நாத் கோயில் மூடல்!

குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலின் நடை  இன்று காலை மூடப்பட்டன. 

DIN

குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலின் நடை  இன்று காலை மூடப்பட்டன. 

இந்த ஆண்டு சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. இதில் கேதார்நாத் கோயில் மே 6ஆம் தேதி திறக்கப்பட்டது.

பாரம்பரியமாக, சார்தாம் கோயிலின் சன்னதிகள் குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும். இந்நிலையில் கேதார்நாத் கோயிலின் நடை இன்று சாத்தப்பட்டது. சிவன் சிலை உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வழிபாடு செய்யப்படும். 

இதையொட்டி கருவறையின் கதவுகள் மூடப்பட்ட பிறகு, கேதார்நாத்தின் பஞ்சமுகி நகரக்கூடிய விக்ரஹ உற்சவ் டோலி (பல்லக்கு) சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு, திரண்டிருந்த பக்தர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கேதார்நாத் சிவனின் பல்லக்கு மண்டபத்திலிருந்து கோயில் வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

பல்லக்கில் எடுத்துச் செல்லப்படும் சிவன் சிலை நாளை உகிமாத்தில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலைச் சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

SCROLL FOR NEXT