இதெல்லாம் கொடுமைப்படுத்துவதாகாது: பெண்ணுக்கு நீதிமன்றம் அறிவுரை
திருமணமான பெண்ணை, குடும்பத்துக்காக வீட்டு வேலைகள் செய்ய வைப்பது துன்புறுத்தலாகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தெரிவித்துள்ளது.
திருமணமான பெண்ணை, குடும்பத்துக்காக வீட்டு வேலைகள் செய்ய வைப்பது, வீட்டு வேலைக்காரியாக நடத்துவதாகவும், துன்புறுத்தலாகவும் ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 498ஏ பிரிவின் கீழ் ஒரு பெண்ணை வீட்டு வேலை செய்ய வைத்து துன்புறுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது பெண் கொடுத்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிக்க.. ஏன் குரங்குகளைப் போல தாவி வருகிறீர்கள்? செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை (விடியோ)
அவர்கள் அளித்த உத்தரவில், திருமணமான பெண் ஒருவரை, வீட்டு வேலை செய்யச் சொல்வது அவரது குடும்பத்துக்காக மட்டுமே தவிர, அவரை வேலைக்காரியாக நடத்துவதற்காக அல்ல. வீட்டு வேலைகள் செய்ய விரும்பவில்லை என்றால் திருமணத்துக்கு முன்பே மணமகன் வீட்டாரிடம் கூறியிருந்தால், அவர்கள் திருமணம் தொடர்பாக முடிவெடுக்கும் போது அது உதவியாக இருந்திருக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.