இண்டிகோ விமானத்தில் தீ: தில்லியில் அவசர தரையிறக்கம்
இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாஇண்டிகோ விமானத்தில் தீ: தில்லியில் அவசர தரையிறக்கம்
இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு இன்று இரவு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது எஞ்சினில் தீப்பொறி கிளம்பியுள்ளது.
இதனைக் கண்ட விமானி, தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட தீயை விமான நிலைய மீட்புப் படையினர் அணைத்தனர்.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் காரணத்தால் தில்லியில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து, தில்லி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.