இந்தியா

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு: பெற்றோர்கள் பலி

குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அச்சிறுவனின் பெற்றோர்கள் பலியாகியுள்ளனர்.

DIN

குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அச்சிறுவனின் பெற்றோர்கள் பலியாகியுள்ளனர்.


குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டிற்காக தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொங்கு பாலம் பழுந்தடைந்த நிலையில், புனரமைக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வந்தது. 

பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400க்கும் மேற்பட்டோர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கினர்.

உமா டவுன்ஷிப்பில் வசிப்பவரின் கூற்றுப்படி, அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஹர்திக் ஃபால்டு, அவரது மனைவி மிரால்பென், நான்கு வயது மகன் ஜியான்ஷ், ஹர்திக்கின் உறவினர் ஹர்ஷ் ஜலவாடியா மற்றும் அவரது மனைவி ஆகியோர் கேபிள் பாலத்தை பார்வையிடச் சென்றுள்ளனர்.

இந்த விபத்தில் ஹர்திக் மற்றும் அவரது மனைவி மிரல் இறந்தனர். அதேசமயம் ஜியான்ஷ் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஜியான்ஷின் மாமா ஹர்ஷும் உயிர் பிழைத்து, காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஹர்ஷின் மனைவியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT