இந்தியா

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.43 லட்சம் கோடி!

DIN

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ. 1.43 லட்சம் கோடியாக வசூலானது.

நடப்பாண்டு மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி, ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடி வசூலான ஜிஎஸ்டி கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 1.49 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி ரூ.1.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.  இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.1,12,020 கோடியுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும். மேலும்,  தொடர்ந்து 6-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ.1,43,612 கோடியில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.24,710 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.30,951 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.77,782 கோடியும், செஸ் ரூ.10,168  கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT