20 சதவீதம் அதிகரித்தது சேவைகள் ஏற்றுமதி
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் ஜூலையோடு ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் ஜூலையோடு ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயா்ந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 20.2 சதவீதம் அதிகமாகும்.
எனினும், கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்த சேவைகள் ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிடுகையில், கடந்த ஜூலையில் அது குறைவாக உள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி 22.3 சதவீதம் அதிகரித்து 1,392 கோடி டாலராக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.