இந்தியா

தீஸ்தா சீதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்

சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

DIN

சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்குவதை குஜராத் உயா்நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

2002, குஜராத் கலவர வழக்கில் பொய்யான ஆதாரங்களை ஜோடித்து அப்பாவிகளைக் கைது செய்ய உதவியதாக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆா்.பி.ஸ்ரீகுமாா் ஆகியோா் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தீஸ்தாவின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம், மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

இதற்கு எதிராக தீஸ்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமா்வு, சிறையில் உள்ள ஒரு பெண்ணின் ஜாமீன் மனுவை விசாரிக்க 6 வாரங்கள் தாமதம் செய்தது ஏன் என்று குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கை மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, ‘ஜூன் 25 முதல் ஒரு பெண் சிறையில் உள்ளாா். அவரிடம் 7 நாள்களுக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான வழக்கு குறித்து மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய குஜராத் உயா்நீதிமன்றம் அப்போதே அவருக்கு இடைக்கால ஜாமீனையும் வழங்கி இருக்கலாம். தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. வழக்கமான ஜாமீன் தொடா்பாக உயா்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரையில் தீஸ்தா தனது கடவுச்சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் அதிகரிப்பு: மாற்றுவழிகளைக் கையாளும் கடத்தல்காரா்கள்

நாளை ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்

தமிழகத்தில் மேலும் இரு சிப்காட் தொழில் பூங்கா

மனிதநேய ஜனநாயக கட்சி விவகாரம்: தமிமுன் அன்சாரிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி

SCROLL FOR NEXT