உ.பி.யில் பேருந்து மீது லாரி மோதல்: 4 பேர் பலி, 14 பேர் காயம்!
உத்தரப் பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
ராம்நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மஹங்குபூர் கிராமம் அருகே இந்த விபத்து நடைபெற்றது.
இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பூர்ணேந்து சிங் கூறுகையில்,
Advertisement
பேருந்தின் டயர் பழுதடைந்ததால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
60 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது வேகமாக வந்த லாரி மோதியது.
விபத்தின்போது பெரும்பாலான பயணிகள் பேருந்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மீதமுள்ள பயணிகளை அனுப்ப உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.