இந்தியா

தில்லியில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு: 2 பேர் கைது

DIN


வடக்கு தில்லியின் ரோகிணியில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். 

போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி மணீஷ்(34), அவரது கூட்டாளி டிங்கு ஆகியோர் பயணித்த காரை மறித்து கைது செய்ததாக காவல்துறை துணை ஆணையம் விசித்ரா வீர் தெரிவித்தார். 

அவர்களிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 1.3 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. 

கிழக்கு தில்லியில் உள்ள நந்த் நாக்ரியில் வசிக்கும் மணீஷ், கடந்த 2014ம் ஆண்டு லாஹோரி கேட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

இரண்டாவது குற்றவாளியான டிங்கு (34), ஷாஹ்தராவில் வசிப்பவர் மற்றும் மணீஷின் குழந்தைப் பருவ நண்பர்.

இவர் முன்பு கலால் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தில்லி-என்சிஆர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் டிங்கு மணீஷுக்கு உதவியதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT