படம்: முகநூல் 
இந்தியா

கேரளம்: தாக்கிய சிறுத்தையை வெட்டிக்கொன்ற பழங்குடி விவசாயி

கேரளத்தில் தம்மை தாக்கிய சிறுத்தையை கூலித் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

கேரளத்தில் தம்மை தாக்கிய சிறுத்தையை பழங்குடி விவசாயி ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், மான்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கதக்க சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் பழங்குடி விவசாயியான கோபாலன்(45) சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது சகோதரர் மகன் சோமராஜனுடன் விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார். 

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென கோபலனை தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தப்பியோட முயன்றுள்ளார். இருப்பினும் அந்த சிறுத்தை மீண்டும் கோபலனை தாக்கியதால் தமது கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையை தலை, வயிறு பகுதியில் வெட்டியுள்ளார். இதில் சிறுத்தை உயிரிழந்தது. சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமுற்ற கோபலனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்காப்புக்காக சிறுத்தையை கொன்ற கோபலன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அம்மாநில வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

SCROLL FOR NEXT