இந்தியா

இந்தியா வந்தடைந்தார் வங்கதேச பிரதமர்: 4 நாள்கள் சுற்றுப்பயணம்

DIN

நான்கு நாள்கள் பயணமாக வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.

இந்த பயணத்தின்போது, புதிதாக பதவியேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஷேக் ஹசீனா, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வா்த்தக உறவை விரிவுபடுத்துதல், மின்சாரம் மற்றும் எரிபொருள் துறையில் ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளனர்.

மேலும், இரு நாடுகளிடையே நீா் மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரயில்வே, சட்டம், செய்தி மற்றும் ஒலிபரப்பு உள்பட 7 துறைகளின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

கடந்த 2015 முதல் இருநாட்டுத் தலைவர்களும் 12 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற நாட்டின் 50ஆம் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT