வ.உ.சி. சிந்தனைகள் ஊக்கமளிக்கின்றன: பிரதமர் மோடி புகழாரம்
விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மாமனிதர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது.
இதையும் படிக்க- வ. உ. சிதம்பரனாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.