இந்தியா

பயங்கரவாதியின் உடலைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான்: பின்னணி என்ன?

DIN


ஜம்மு: கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக, லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் பெற்றுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீரின் சப்ஸ்கோட் கிராமத்தில், திங்கள்கிழமை, தபாரக் ஹுசைன் (32) என்ற பயங்கரவாதயின் உடலை பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது. 

காவல்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் முன்னிலையில், பயங்கரவாதியின் உடலை ஒப்படைக்கும் நிகழ்வானது நடைபெற்றது.

ரஜௌரி ராணுவ மருத்துவமனையில் இரண்டு நாள்களுக்கு முனபு, ஹுசைன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ரஜௌரி மாவட்டம் நௌஷேரா செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது காயமடைந்த ஹுசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீரில் ராணுவ சோதனைச் சாவடியைத் தாக்குவதற்காக ஊடுருவிய லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதக் குழுவில் பயிற்சி பெற்ற ஏஜென்ட்டும், முக்கிய நபருமான பயங்கரவாதியின் சடலத்தை பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது. கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக பயங்கரவாதி ஒருவரின் சடலத்தை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லியை அடுத்த சப்ஸ்கோட் கிராமத்தில் வசித்து வருபவா் தபாரக் ஹுசைன் (32). கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய-பாகிஸ்தான் எல்லையின் வழியாக ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினரால் சுடப்பட்டதில் அவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாா்.

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது அவரை உயிருடன் வைத்திருப்பதற்காக ராணுவ வீரா்கள் அவருக்கு 3 யூனிட் ரத்தத்தை தானம் செய்தனா்.

மாரடைப்பால் உயிரிழந்த 2 நாள்களுக்குப் பிறகு தபாரக் ஹுசைனின் உடல் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள சகன் தா பாக் பகுதியில் காவல்துறையினா் மற்றும் இதர சிவில் அதிகாரிகளின் முன்னிலையில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் இப்போதுதான் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு உயிரிழக்கும் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களின் சடலங்களை ஏற்க பாகிஸ்தான் எப்போதும் மறுத்து வருகிறது.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவச் சட்டமுறைகளும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. அதன்படி அவரது உடலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்தை தொடா்பு கொண்டோம் என்று ராணுவ அதிகாரி கூறினார்.

ராணுவத்தின் 80ஆவது காலாட்படைப் பிரிவின் தளபதி பிரிகேடியா் கபில் ராணா, நவ்ஷேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில்தான் ஹுசைனை தடுத்து நிறுத்தும்போது சுடப்பட்டாா். ஹுசைன் மற்றும் மேலும் இருவா் இணைந்து இந்திய ராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பின்னா் ராணுவத்தினரிடம் ஹுசைன் ஒப்புக்கொண்டதாகவும் இதற்காக பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்சியைச் சோ்ந்த கா்னல் யூனுஸ் சௌதரி என்பவா் தனக்கு ரூ. 30 ஆயிரம் பாகிஸ்தான் கரன்சியை கொடுத்து அனுப்பியதாகவும் ஹுசைன் கூறியதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT