இந்தியா

உ.பி. பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.

DIN

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார். 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் கிரி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக லக்னெளவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சீதாபூர் அருகே செல்லும் வழியில் கிரி உயிரிழந்தார். 

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கோலா கோக்ரநாத் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பாஜக எம்எல்ஏவின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'அரவிந்த் கிரியின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடவுள் ஸ்ரீராமர் தனது காலடியில் அவருக்கு இடம் கொடுக்கட்டும், அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தாங்கும் வலிமையை வழங்கட்டும். இந்த அளவிட முடியாத இழப்பு, ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT