இந்தியா

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 8 பேர் காயம்

DIN

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

காவல்துறை மேலும் கூறுகையில், 

குவெட்டாவின் மெகோங்கி சாலையில் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒரு கடையில் கைக்குண்டு வீசினர். 

இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் கடையின் கண்ணாடிகள் நொறுங்கின.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் பீதி ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பலுசிஸ்தான் மாகாணம் பாதுகாப்புப் படையினர், குடிமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், கடந்த ஒரு மாதமாகப் பெய்து வரும் தொடர் மழை, திடீர் வெள்ளம் காரணமாக பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன.

பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 1,200 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அதில் பலுசிஸ்தானில் மட்டும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT