முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வுமையம் கூறுகையில், 

கத்ராவின் கிழக்கு-வடக்கு-கிழக்கில் 62 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. 

இன்று காலை 7.52-க்கு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →