இந்தியா

உத்தரகண்டில் மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட கிராமத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி

உத்தரகண்டில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.  

DIN

உத்தரகண்டில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். 

உத்தரகண்ட் மாநிலம், கோட்டிலா கிராமம், காளி நதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வீடுக்குள் புகுந்த சேறுடன் கலந்த வெள்ள நீரில் சிக்கி பெண் ஒருவா் பலியானாா். 30க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. கிராமத்தில் பாதிக்கப்பட்ட 170 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வெள்ளநீரில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

மாநில பேரிடா் மீட்பு படை மற்றும் காவல் துறையினா் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். எல்லையை ஒட்டிய நேபாள பகுதியில் அமைந்துள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட கோட்டிலா கிராமத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர் கூறியதாவது, "இங்கு நிறைய சேதங்கள் உள்ளன. கோட்டிலா கிராமத்தில் 58 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர். சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT