22 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பின் 22 ஆவது உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த அமைப்பின் நடவடிக்கைகளினம் மூலம் கிடைத்துள்ள பலன்கள் குறித்து மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதையும் படிக்க | மோடி பெற்ற பரிசுப் பொருள்கள் வரும் 17 முதல் ஏலம்: ஏலத்தில் இடம் பெறும் விலை உயர்ந்த பொருள்கள் எவை?
எதிர்காலத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்து பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
உஸ்பெகிஸ்தான் அதிபரின் அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
பெங்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, இந்தியா, ரஷியா, கஜஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.