குஜராத்தில் ஊழலற்ற ஆட்சி: ஆம் ஆத்மி உறுதி!
குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சிக்கு உறுதியளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சிக்கு உறுதியளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,
அரசாங்கத்தில் உள்ள எவரும் ஆம் ஆத்மி கட்சியாக இருந்தாலும் சரி, மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, ஊழல் செய்தால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு, ஊழல் நடவடிக்கைகளுக்காக ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்தபோது எடுத்த நடவடிக்கையை மேற்கோள் காட்டினார்.
படிக்க: தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்...: உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி ஸ்ரீகாந்த்
பொது நிதிகள் பொது வளர்ச்சிக்கு 100 சதவீதம் பயன்படுத்தப்படும் என்றும், அது கார்ப்பரேட் நண்பர்களுக்கு விநியோகிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
பாஜக ஆளும் மாநிலங்களில், அரசுத் துறைகளில் தங்களுடைய வேலையைச் செய்ய, குடிமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பஞ்சாப் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி இல்லாத நிலையில் விளம்பரங்களுக்குப் பணத்தை வீணடிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் அஜாய் குமாரின் கருத்து குறித்துக் கேட்டதற்கு, “காங்கிரஸ் முடிந்துவிட்டது, காங்கிரஸ் கட்சியின் கேள்வியை நிறுத்துங்கள்” என்று கேஜரிவால் கூறினார்.