எம்.பி. சந்தோஷ் குமாருடன், அமைச்சர் ஸ்ரீனிவாஸ். 
இந்தியா

800 ஆண்டுகள் பழமையான மரத்தை பாதுகாக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

தெலங்கானாவில் 800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சந்தோஷ் குமார் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

DIN

தெலங்கானாவில் 800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சந்தோஷ் குமார் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

மஹ்பூப்நகர் மாவட்டத்தில் பில்லாலமரி என்ற 800 ஆண்டுகள் பழமையான பில்லமரி என்ற ஆலமரம் உள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆலமரம் இது. 3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரத்தின் கிளை கரையான் தாக்குதலால் கடந்த 2017ஆம் ஆண்டு முறிந்து விழுந்தது. அதன்பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் மீண்டும் மரம் செழிப்பாக வளர்ந்துள்ளது.

இந்நிலையில், ரூ. 30 லட்சம் மதிப்பில் பில்லமரி சந்திப்பு திட்டத்தை தெலங்கானா சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் மற்றும் எம்.பி. சந்தோஷ் குமார் ஆகியோர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற சந்தோஷ் குமார், தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து மரத்தை பாதுகாக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

“இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு. அழியும் தருவாயில் இருந்த மரம் தற்போது செழிப்பாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரத்தை பாதுகாத்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மரத்தை தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்ளும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்ரீனிவாஸுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.”

இதையடுத்து, எம்.பி. சந்தோஷ் குமாரும், அமைச்சர் ஸ்ரீனிவாஸும் மரத்துடன் சுயப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT