அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்) 
இந்தியா

அக்னிபத் திட்டத்துக்கு ஆம் ஆத்மி முழு ஒத்துழைப்பு வழங்கும்: கேஜரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

DIN


புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

அக்னிவீரர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடும் விமரிசனங்களை முன் வைத்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் நான்கு ஆண்டுகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுக்க இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

எங்களுக்கு அக்னிபத் திட்டத்தின் மீது மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும், மத்திய அரசு செயல்படுத்தும் அக்னிபத் திட்டத்துக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT