முகப்பு
இந்தியா

'அபாய கட்டத்தில் ஜனநாயகம்’: சீதாராம் யெச்சூரி கருத்து

நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சியின்கீழ் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் அபாயக் கட்டத்தில் உள்ளதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
சீதாராம் யெச்சூரி
பகிர்:

நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சியின்கீழ் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் அபாயக் கட்டத்தில் உள்ளதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி புதன்கிழமை பேசும்போது, நாட்டில் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும்  அபாயக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

“பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என விரும்பும் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →