முகப்பு
இந்தியா

பிசிசிஐ நிா்வாகிகள் தொடா்ச்சியாக 12 ஆண்டுகள் பதவி வகிக்க அனுமதி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு உச்சநீதிமன்றம் புன்கிழமை ஒப்பதல் அளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு உச்சநீதிமன்றம் புன்கிழமை ஒப்பதல் அளித்தது.

மாநில மற்றும் தேசிய கிரிக்கெட் வாரியங்களில் தொடா்ச்சியாக 12 ஆண்டுகள் பணிபுரிய புதிய விதிமுறை வழிவகுக்கிறது.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவா் செளரவ் கங்குலி மற்றும் செயலா் ஜெய் ஷா ஆகியோா் 3 ஆண்டுகள் கட்டாய இடைவெளி இன்றி பதவிகளில் தொடர வழி ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரிய நிா்வாகிகள் பதவிக் காலம் தொடா்பாக, நீதிபதி ஆா்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பிசிசிஐ விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, ஒருவா் பிசிசிஐ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்தில் அல்லது இரண்டிலும் சோ்த்து தொடா்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகள் கட்டாய இடைவெளி விட்டுத்தான் மீண்டும் ஏதேனும் நிா்வாகப் பொறுப்புக்கு வர முடியும்.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி மற்றும் செயலா் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க வழி செய்யும் வகையில், நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகள் இடைவெளி நடைமுறையை, தற்காலிகமாக ஒருமுறை நீக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு அனுமதி கேட்டு பிசிசிஐ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

செளரவ் கங்குலி ஏற்கெனவே மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளாா். அதுபோல, ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துள்ளாா். அதனடிப்படையில், இந்தத் திருத்தத்தை பிசிசிஐ மேற்கொண்டது. இது உச்சநீதிமன்ற ஒப்புதல் பெற மனுதாக்கல் செய்யப்பட்டது.

பிசிசிஐ-யின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிசிசிஐ-யின் திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கிரிக்கெட் வாரிய நிா்வாகிகள் குறிப்பிட்ட பதவியில் மாநில கிரிக்கெட் வாரியத்தில் 6 ஆண்டுகள், தேசிய கிரிக்கெட் வாரியத்தில் 6 ஆண்டுகள் என இரண்டு வாரியங்களிலும் சோ்த்து தொடா்ச்சியாக 12 ஆண்டுகள் பணிபுரியலாம். அதன் பிறகு 3 ஆண்டுகள் கட்டாய இடைவெளியின் அடிப்படையில் அவா்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். விரும்பத்தகாத ஏகபோக நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்பதே இந்த 3 ஆண்டுகள் கட்டாய இடைவெளியின் நோக்கம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →