மது விற்பனை 
இந்தியா

ஆந்திரத்தில் ரூ.5.47 கோடி மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்கள் அழிப்பு! 

தெலங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டிகளை ஆந்திர போலீசார் கைப்பற்றி அழித்தனர். 

DIN

தெலங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டிகளை ஆந்திர போலீசார் கைப்பற்றி அழித்தனர். 

சம்பவ இடத்தில் 5.47 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகம என்ற இடத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

தெலங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டன.  இதுவரை 2,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்து 226 வழக்குகள் பதிவு செய்துள்ளோம் என்று விஜயவாடா காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா தெரிவித்தார்.

மாநில அரசின் உத்தரவின் பேரில் ஆந்திர மாநில போலீசார் நகரின் புறநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் ஆந்திரப் பிரதேச காவல்துறை எலுரு மாவட்டத்தில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 33,934 சட்டவிரோத மதுபாட்டில்களை அழித்தனர் என்பது குறிப்பிடத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

SCROLL FOR NEXT