இந்தியா

வடகிழக்கு தில்லியில் வீடு இடிந்து விழுந்து விபத்து: 7 பேர் காயம்

வடகிழக்கு தில்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கப் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 7 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

DIN

வடகிழக்கு தில்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கப் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 7 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இடிபாடுகளுக்குள் 2 பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறை குழு மற்றும் தில்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இடிபாடுகளில் சிக்கிய ஒரு பெண் உள்பட 7 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

தொழிலாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென முதல் தளத்தின் கூரை இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தில்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கர்க் கூறுகையில், 

இந்த சம்பவம் குறித்து மதியம் 12:02 மணியளவில் அழைப்பு வந்தது, அதன் பிறகு நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT