இந்தியா

உலகின் 2-வது பெரிய பணக்காரரானார் அதானி!

DIN

உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2-வது  இடத்தைப் பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில்  துவங்கின.

அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் (ரூ. 12.40 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.

எலான் மஸ்க்

கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4-வது பெரிய பணக்காரராக இருந்தார்.

அதன் பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தையும்  ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.38 லட்சம் கோடி) 3-வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ்  (ரூ. 11.9 லட்சம் கோடி)  4-வது இடத்திலும் உள்ளனர்.

பெர்னார்ட் அர்னால்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டாலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5-வது இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT