முகப்பு
இந்தியா

அடுத்த வாரம் பாஜகவில் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
கோப்புப்படம்
பகிர்:

முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அவர் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கிய அமரீந்தர் சிங் அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். 

ஆனால் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில்  இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார். 

தில்லியில் பாஜக தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணையவுள்ளார். அத்துடன் தனது கட்சியையும் அமரீந்தர் சிங் பாஜகவுடன் இணைக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →