சிறுத்தைகள் வந்துவிட்டன: வேலைவாய்ப்புகள் எங்கே? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி  
இந்தியா

சிறுத்தைகள் வந்துவிட்டன: வேலைவாய்ப்புகள் எங்கே? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி 

8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் உருவாக்கப்படவில்லை என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் உருவாக்கப்படவில்லை என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து  பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகளை பிரதமர் நரேந்திரமோடி பூங்காவில் விடுவித்தார். 

இந்நிலையில் இந்த நிகழ்வை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பதிவில், “8 சிறுத்தைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு விட்டன. 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் ஏன் ஏற்படுத்தப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த மக்களவைத் தேர்தலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT