இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தியுடன் சசி தரூர் திடீர் சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

DIN

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தலைவர் பதவிக்கான தேர்தல் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜி23 அதிருப்தி தலைவர்களில் சிலரும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சசி தரூரின் இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT