இந்தியா

தவிர்க்க முடியாத வகையில் விளம்பரங்கள் ஏன்! யூடியூப் விளக்கம்

DIN

விடியோ பார்க்கும்போது தவிர்க்க முடியாத வகையில் (unskippable ads) அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்கள் வருவதற்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

கூகுளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் யூடியூப் பயன்படுத்துகின்றனர். யூடியூப் மூலம் தகவல்களை விடியோக்களாக பயனர்கள் பெறுகின்றனர். 

பொதுவாக யூடியூப்பில் விடியோக்களின் ஆரம்பத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். விடியோ உரிமையாளர்களின் அனுமதியுடன் இடையிடையேயும் விளம்பரங்கள் திரையிடப்படும். அப்போதுகூட நீண்ட விளம்பரங்களை 5 விநாடிகளுக்கு பிறகு தவிர்த்துவிடும் வகையில் விளம்பரங்கள் இருந்தன.

ஆனால், யூடியூபில் சமீபகாலமாக நீண்ட நேரம் ஒளிபரப்பாகும் அனைத்து விடியோக்களின் இடையிலும் விளம்பரங்கள் திரையிடப்படுகின்றன. 

இது தொடர்பாக பயனர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 

சோதனை அடிப்படையில் விடியோக்களின் இடையிடையே விளம்பரங்கள் திரையிடப்படுகின்றன. ஆரம்பகட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளம்பரங்களின் நீளம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் பயனர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிறகு படிப்படியாக விளம்பரங்கள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக தவிர்க்க முடியாத வகையிலான விளம்பரங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது. 

பயனர்களின் விடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் யூடியூப் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று பல புதிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை பயனர்களுடன் இணைக்கவும் யூடியூப் முயன்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT