இந்தியா

நாளொன்றுக்கு ரூ.1612 கோடி வருமானம்: மலைக்க வைக்கும் அதானியின் சொத்துக்கள்

DIN

கடந்த 2021ஆம் ஆண்டு நாளொன்றுக்கு ரூ.1612 கோடி சொத்துக்களை கெளதம் அதானி சேர்த்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. 

உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசை பின்னுக்குத் தள்ளி கெளதம் அதானி 2-வது  இடத்தைப் பிடித்துள்ளார். 

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி ரூ. 12.40 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2-வது இடத்திலும் எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) சொத்துக்களுடன் முதலிடத்திலும் உள்ளனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்து 2022ஆம் ஆண்டு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களானது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளில் 13 முறை அதானியின் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளன. இதன்மூலம் குறுகிய காலத்தில் மிக வேகமாக சொத்துக்களை அதிகரித்த பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் அதானி முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் ஐஐஎஃப்எல் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள தரவுகளின்படி கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 116 சதவிகிதம் அதிகரித்துள்ளதும், இதன்மூலம் நாளொன்றுக்கு அவர் ரூ.1612 கோடி சொத்துக்களை சேர்த்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அதேபோல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 11 சதவிகிதம் அதிகரித்ததன் மூலம் நாளொன்றுக்கு ரூ,210 கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT