இந்தியா

என்ஐஏ சோதனை; பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் கைது: அமித் ஷா ஆலோசனை

DIN

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயங்களுக்கு ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,  எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில்,  பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் தேசிய தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,  எஸ்டிபிஐ நிர்வாகிகளின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், என்ஐஏ இயக்குநர், உள்துறை செயலாளருடன் அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT