தனியார் கல்லூரி விடுதியிலிருந்து காணாமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு 
இந்தியா

தனியார் கல்லூரி விடுதியிலிருந்து காணாமல் போன மாணவிகள் சென்னையில் மீட்பு

மங்களூருவில் இயங்கும் மூன்று தனியார் கல்லூரியின் விடுதியிலிருந்து ஒரு சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன 3 மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

PTI


மங்களூரு: மங்களூருவில் இயங்கும் மூன்று தனியார் கல்லூரியின் விடுதியிலிருந்து ஒரு சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன 3 மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மாநகர காவல்துறை ஆணையர் ஷஷி குமார் கூறுகையில், பெங்களூருவைச் சேர்ந்த 2 மாணவிகளும், சித்ரதுர்காவைச் சேர்ந்த ஒரு மாணவியும் கல்லூரி விடுதியிலிருந்து காணாமல் போயினர்.

காணாமல் போன வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவிகள் சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோரை சந்திக்க அச்சம் கொண்டு, விடுதியில் இருந்து கிளம்பி சென்னை சென்றுள்ளனர். அங்குள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்த மாணவிகள், தங்களிடம் செல்லிடப்பேசி இல்லாததாலும், உறவினரை தொடர்பு கொள்ள முடியாததாலும், சென்னையில் அங்கும் இங்கும் சுற்றியலைந்துள்ளனர்.

இந்தநிலையில், காவல்துறையினர் அவர்களை மீட்டு விவரங்களை சேகரித்து மங்களூரு காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

மங்களூரு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், மாதத்துக்கு ஒரு முறையாவது மாணவர்கள் பெற்றோரை சந்திக்க விடுதிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT