இந்தியா

உத்தரகண்ட் விடுதி கொலை: பாஜக தலைவரின் மகனை காட்டிக்கொடுத்த சிசிடிவி

DIN


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கேளிக்கை விடுதியின் பெண் வரவேற்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், கொலை செய்த பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரித்வாரின் பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா, தனியார் கேளிக்கை விடுதி நடத்தி வந்தார். இங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த 19 வயது பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்க.. வீட்டுக் காவலில் சீன அதிபர்? இணையதளத்தில் பரவும் செய்தியால் இந்தியாவுக்கு ஆபத்தா?

உடடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி, கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட உடலைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கேளிக்கை விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா கொலை செய்து, பெண்ணின் உடலை கால்வாயில் வீசியது தெரிய வந்தது.

சட்டவிரோதமாக ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த அந்தகேளிக்கை விடுதி வெள்ளிக்கிழமை இரவு முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் உத்தரவின்பேரில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் புல்கிட் ஆர்யா, விடுதி மேலாளர் சௌரவ் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு, காவலர்கள் நடத்திய விசாரணையில், பெண்ணை கொன்று கால்வாயில் வீசியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்போது, வழக்கை திசைதிருப்ப இம்மூவரும் முயன்றதாகவும், முறைப்படி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, அவரைக் காணவில்லை என்று திங்கள்கிழமை காலை பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, கடந்த 4 நாள்களாக பெண்ணைத் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

புகாரில் பாஜக தலைவரின் மகன் சிக்கியிருப்பதால் அலட்சியத்துடன் தொடங்கிய விசாரணை தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் பரவியது. இதனால், பெண் காணாமல் போன அன்று கேளிக்கை விடுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் எடுத்துப் பார்த்தபோது, விடுதிக்குள் அப்பெண் வருவது பதிவாகியிருந்தது. ஆனால் வெளியே செல்லும் காட்சிகள் இல்லை. எனவே அவருக்கு விடுதிக்குள்ளே தான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் நடந்த விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT