வெறும் கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தது ஏன்? பாஜக எம்.பி. பதில் 
இந்தியா

வெறும் கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தது ஏன்? பாஜக எம்.பி. பதில்

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜனார்தன் மிஷ்ரா, வெறும் கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்த விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பரப்பப்பட்டது.

DIN


ரேவா: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜனார்தன் மிஷ்ரா, வெறும் கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்த விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பரப்பப்பட்டது.

தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பள்ளியின் மாணவிகளுக்கான கழிப்பறையை, வெறும் கைகளால் சுத்தம் செய்தார் ஜனார்தன் மிஷ்ரா.

பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்கச் செய்யக் சென்ற மிஷ்ரா, மாணவிகளின் கழிப்பறை அசுத்தமாக இருந்ததைப் பார்த்து, அங்கு சுத்தம் செய்ய எந்த உபகரணமும் இல்லாததால், வெறும் கையாலேயே கழிப்பறையை சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார்.

இப்படி வெறும் கையாலேயே கழிப்பறையை சுத்தம் செய்தது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சுத்தமாக இருக்க வேண்டும், சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவே தான் அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனார்.

இதுபோல, 2018ஆம் ஆண்டும், பள்ளியின் கழிப்பறையை மிஷ்ரா சுத்தம் செய்த விடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தையும் இவர் இயக்கி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றதும் நினைவில்கொள்ளத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறும்பின் நகல்... கிருத்திகா!

ஐடி ஊழியர்கள் காரை வழிமறித்து தகராறு செய்த லட்சுமி மேனன்! வைரலாகும் விடியோ!

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? பாலா பதில்!

மலை மேகங்கள்... ஆர்த்தி சுபாஷ்!

SCROLL FOR NEXT