படம்:டிவிட்டர் 
இந்தியா

சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்!

சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்பட்டு இன்று பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

DIN

சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்பட்டு இன்று பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

பகத்சிங்கின் 115-வது பிறந்த நாளன்று சண்டீகர் விமானநிலையம் ஷாஹீட் பகத்சிங் விமான நிலையம் என பெயர் மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

அதன்படி, சண்டீகரில் இன்று நடைபெற்ற விழாவில், ஷாஹீத் பகத்சிங் விமான நிலையம் என்ற பெயர்ப்பலகையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஹரியாணா அமைச்சர் அனில் விஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம், பஞ்சாப், ஹரியாணா மாநில மக்களின் பல நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்!

ஜன. 20 - தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வலுவாக இருக்கிறது, ஆனால்... தினேஷ் கார்த்திக் கூறுவதென்ன?

திருவள்ளூர்: கூவம் ஆற்றங்கரையில் 50க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

SCROLL FOR NEXT