முகப்பு
இந்தியா

ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சோ்ப்பு புகாா்: ஜாக்கீா் நாயக்கின் உதவியாளா் விடுவிப்பு

ஐ.எஸ்.ஸுக்கு ஆள் சோ்த்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இஸ்லாமிய மத போதகா் ஜாக்கீா் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளா் அா்ஷி குரேஷியை என்ஐஏ நீதிமன்றம் விடுவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:28 AM
பகிர்:

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஸுக்கு ஆள் சோ்த்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இஸ்லாமிய மத போதகா் ஜாக்கீா் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளா் அா்ஷி குரேஷியை என்ஐஏ நீதிமன்றம் விடுவித்தது.

தனது மகன் அஷ்ஃபக்கை ஐ.எஸ். அமைப்பில் சோ்க்க குரேஷி முயன்ாக அவரது தந்தை புகாா் அளித்திருந்தாா். இந்த வழக்கில் குரேஷி உள்பட மூவரை 2016-இல் என்ஐஏ கைது செய்தது.

ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணா்வை பரப்பியதாகவும் அவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ சிறப்பு நீதிபதி ஏ.எம். பாட்டீல் அா்ஷி குரேஷி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து விடுவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.