உயர்நீதிமன்றங்களுக்கு மேலும் 37 புதிய நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு 26 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதையும் சேர்த்து, இதுவரை நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் மொத்தம் 138 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ராஜஸ்தான்: துப்பாக்கி முனையில் பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு மிரட்டல்
Advertisement
கடந்த 2016 - ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்களில் 126 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டது அதிகளவாக இருந்த நிலையில், தற்போது, அந்த எண்ணிக்கையை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021- ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்களில் 126 நீதிபதிகளும், உச்சநீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.
இதன் மூலம் நீதித்துறை நியமன நடைமுறைகள், விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.