முகப்பு
இந்தியா

பல்கலை. வேந்தராக முதல்வர்: மே.வ. அமைச்சரவை ஒப்புதல்

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் திருத்த மசோதாவுக்கு மேற்குவங்க அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)
பகிர்:

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் திருத்த மசோதாவுக்கு மேற்குவங்க அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக அந்தந்த மாநில ஆளுநர்களே செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் தான் துணை வேந்தர்களை நியமனம் செய்வார்கள். அதேபோல், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக தற்போதைய ஆளுநர் ஜக்தீப் தங்கர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை, வேளாந்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறைகளின் கீழ் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து விதமான பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வரும் மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

முன்னதாக, பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.