உக்ரைன்: சற்று நேரத்தில் பிரதமர் ஆலோசனை
உக்ரைன் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 7-வது நாளாக தீவிர ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனிலிருந்து 17 இந்தியர்கள் மீட்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளபோதிலும், இன்னும் ஏராளமான மாணவர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.
கார்கீவ் நகரிலிருந்து வெளியேற முயற்சித்தபோது ரயில்களில் ஏற்ற இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அங்குள்ள மாணவர்கள் விடியோ வெளியிட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் வாகனங்கள் இல்லாமல் காத்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நடந்தாவது கார்கீவ் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசுத் தரப்பு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.