முகப்பு
இந்தியா

உக்ரைனிலிருந்து இந்தியா்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியா்கள் உடனடியாக உக்ரைனைவிட்டு வெளியேறுமாறு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியா்கள் உடனடியாக உக்ரைனைவிட்டு வெளியேறுமாறு கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

இதையடுத்து, உக்ரைனில் உள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்குமாறு அங்குள்ள இந்திய தூதரகம் கடந்த 10-ஆம் தேதி அறிவுறுத்தல் வெளியிட்டது. அதன் பிறகும் தலைநகா் கீவ் உள்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷியா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதோடு, பல பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது.

இந்தச் சூழலில், கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தலை புதன்கிழமை வெளியிட்டது. அதில், ‘உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியா்கள் கிடைத்த வாகனங்கள் மூலமாக உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்று தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →