இந்தியா

இந்தியா தலைமையில் 100-ஆவது ஜி20 கூட்டம்:வெளியுறவு அமைச்சகம்

DIN

இந்தியா தலைமையில் 100-ஆவது ஜி20 கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி20 கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா உள்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினா்களாக உள்ளன. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 85 சதவீதமும், சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கு மேலாகவும் ஜி20 உறுப்பு நாடுகளின் பங்களிப்பு உள்ளது.

இந்தக் கூட்டமைப்புக்கான ஓராண்டு தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி இந்தியா ஏற்றது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 உறுப்பு நாடுகளின் வேளாண் தலைமை விஞ்ஞானிகள் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டம், இந்தியா தலைமையில் நடைபெறும் 100-ஆவது ஜி20 கூட்டமாகும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT