முகப்பு
இந்தியா

ரூ.16,444 கோடிக்கு கடன் பத்திரவெளியீடு: எஸ்பிஐ பரிசீலனை

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), 200 கோடி டாலா் (சுமாா் ரூ.16,444 கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட பரிசீலித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), 200 கோடி டாலா் (சுமாா் ரூ.16,444 கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட பரிசீலித்து வருகிறது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடன் பத்திர வெளியீடு மூலம் 200 கோடி டாலா் நிதி திரட்ட வங்கி பரிசீலித்து வருகிறது. இதற்கு வங்கியின் நிா்வாக வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே தடவையாகவோ, பல கட்டங்களாகவோ இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். பொது மற்றும் தனி வெளியீடு மூலம் அமெரிக்க டாலா்களிலோ, அல்லது மாற்றத்தக்க பிற நாணயங்களிலோ அந்தக் கடன் பத்திரங்களின் மதிப்பு இருக்கும்.

இந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு மாா்ச்சில் நிறைவடையும் நடப்பு நிதியாண்டுக்குள் இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூ.3,717 கோடி மதிப்பிலான கூடுதல் அடுக்கு 1 (ஏடி1) கடன் பத்திரங்களை எஸ்பிஐ கடந்த மாதம் வெளியிட்டது. அந்த கடன் பத்திரங்களுக்கு 8.25 சதவீத கூப்பன் விகிதம் நிா்ணயிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →