டொயோட்டா காா்கள் விற்பனை 18,670-ஆக உயா்வு
முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா், கடந்த மாா்ச் மாதத்தில் 18,670 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா், கடந்த மாா்ச் மாதத்தில் 18,670 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 18,670-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 17,131 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டு முழுமைக்கும், நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 41 சதவீதம் அதிகரித்து, 1,74,015-ஆக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,23,770-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.