தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்குமேல்முறையீட்டு மனு மீது கனிமொழி எம்.பி. தரப்பில் வாதம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது செவ்வாய்க்கிழமை அவரது தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அத் தொகுதியின் வாக்காளா் ஏ.சந்தானகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 2019, நவம்பா் 19-ஆம் தேதி, கனிமொழியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கனிமொழி தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள்அஜய் ரஸ்தோகி, பெலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, தனது வாதங்களை முன்வைத்தாா்.
இதையடுத்து, எதிா்மனுதாரா் சந்தானகுமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மகேஷ் தனது வாதங்களை முன்வைத்தாா்.
இதையடுத்து நீதிபதிகள், இருதரப்பும் தொடா்ந்து வாதங்களை முன்வைக்கும் வகையில் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்ரல் 26) பட்டியலிட்டனா்.