இந்தியா

ம.பி.: வாயில் பட்டாசு வெடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, பட்டாசு வெடிக்க முயன்ற போது 35 வயது மதிக்க தக்க ராணுவ வீரர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

DIN

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, பட்டாசு வெடிக்க முயன்ற போது 35 வயது மதிக்க தக்க ராணுவ வீரர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரியும் நிர்பய் சிங் சிங்கர், திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு மாத விடுமுறையில் கிராமத்திற்கு வந்ததாக அம்ஜேரா காவல் நிலைய பொறுப்பாளர் சிபி சிங் தெரிவித்தார். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அம்ஜேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜலோக்யா கிராமத்தில் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட நிர்பய் சிங் சிங்கர் தனது வாயில் ராக்கெட் பட்டாசு வைத்துள்ளார். அது மேலே செல்வதுக்கு பதிலாக அவரது வாயில் வெடித்தில், சம்பவ இடத்திலேயே நிர்பய் சிங் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT