இந்தியா-பிரிட்டன் கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்
இந்தியா-பிரிட்டன் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரி சமவெளிப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தியா-பிரிட்டன் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரி சமவெளிப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியா-பிரிட்டன் இடையே ‘அஜய வாரியா்’ என்ற பெயரில் இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரகண்டில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 7-ஆவது கூட்டு ராணுவப் பயிற்சி பிரிட்டனில் உள்ள சாலிஸ்பரி சமவெளிப் பகுதியில் வியாழக்கிழமை தொடங்கியது.
நோ்மறையான ராணுவ உறவை உருவாக்குதல், ஒருவா் மற்றொருவரின் சிறந்த நடைமுறைகளை கற்றுக் கொள்ளுதல், ஒன்றிணைந்து பணியாற்றும் திறனை மேம்படுத்துதல், இருநாட்டு ராணுவத்தினா் இடையே தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை பயிற்சியின் நோக்கமாகும். இந்தப் பயிற்சி மே 11-ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘இந்திய ராணுவத்தின் பிகாா் படைப் பிரிவினா் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் பயிற்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனா்.