முகப்பு
இந்தியா

அரசுப் பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம்: பஞ்சாபில் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது 

பஞ்சாபில் அரசுப் பள்ளியில் ஆபாச விடியோவை ஒளிபரப்பு செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
கோப்புப் படம்.
பகிர்:

பஞ்சாபில் அரசுப் பள்ளியில் ஆபாச விடியோவை ஒளிபரப்பு செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். 

பஞ்சாப் மாநிலம், கோபிந்த்புரா மொஹல்லாவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜீவ் சர்மா. இவர் நேற்று ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பறையில் எல்சிடி திரையில் ஆபாச வீடியோவைக் காட்டி தவறான முறையில் சைகைகளும் செய்துள்ளார். 

இதுதொடர்பாக பள்ளி மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜீவ் சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.