இந்தியா

முத்தலாக் தடை சட்டம் குறித்துமுஸ்லிம் பெண்களிடம் பிரசாரம்:பாஜக எம்பிக்களுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு மேற்கொண்ட முத்தலாக் தடைச் சட்டம் நடவடிக்கை குறித்து அந்த மதப் பெண்களிடம் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது

DIN

முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு மேற்கொண்ட முத்தலாக் தடைச் சட்டம் நடவடிக்கை குறித்து அந்த மதப் பெண்களிடம் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது கொண்டு சென்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பிக்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் எம்பிக்களுடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினாா். இதில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரையும் சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பாக முத்தலாக்கை குற்றவியல் நடவடிக்கையாக மாற்றிய மத்திய அரசின் முயற்சியை சகோதரா் பாச பண்டிகையான ரக்ஷா பந்தனின்போது முஸ்லிம் பெண்களிடம் கொண்டு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சில எம்பிக்கள் தெரிவித்தனா்.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லிம் ஆண்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை சட்டத்தை மத்திய பாஜக அரசு 2019-இல் கொண்டு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT